தேவையான பொருட்கள்
- சம்பா ரவை ( கோதுமை ரவை)
- இட்லி மாவு
- பாசிப்பருப்பு
- கேரட்
- சீரகம்
- எண்ணெய்
- தயிர்
செய்முறை
கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சீரகம், இரண்டு ஸ்பூன் பாசிப்பருப்பு, 1/4 கப் துருவிய கேரட் சேர்த்து வதக்கவும்.
ஒரு கப் கோதுமை ரவை, 1/2 கப் தயிர், 1/2 கப் இட்லி மாவு, வதக்கி வைத்துள்ள கேரட், 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து விடவும்.
பின், தயார் செய்து வைத்துள்ள மாவை இட்லி பாத்திரத்தில் ஊற்றி வேக வைக்கும்.
