சோள மாவு ஸ்வீட்

தேவையான பொருட்கள்

  • சோள மாவு
  • மைதா
  • சர்க்கரை
  • நெய்
  • ஃபுட் கலர்

செய்முறை

கடாயில், ஒரு ஸ்பூன் நெய், 1/2 கப் சோள மாவு, 1/4 கப் மைதா சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பாத்திரத்தில், ஒரு கப் சர்க்கரை, 1/2 கப் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சவும்.

பின், வறுத்து வைத்த மாவுடன் இரண்டு சொட்டு ஃபுட் கலர், இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து விடவும். பாகு ஆறுவதற்கு முன் தயார் செய்து வைத்துள்ள மாவுடன் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து தோசை மாவு பதத்தில் இருந்து இறுக்கமாக வரும் வரை நன்கு கலந்து விடவும்.

பின்னர், ஒரு சதுரமான தட்டில் ட்டில் ஊற்றி நன்கு ஆறிய பின், சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். தேவைப்பட்டால் அதன் மேல் சர்க்கரை பொடி தூவி கொள்ளலாம்.

Previous Post Next Post