பச்சை பட்டாணி பிரியாணி

தேவையான பொருட்கள்

  • பச்சை பட்டாணி
  • சீரக சம்பா அரிசி
  • தக்காளி
  • பெரிய வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • இஞ்சி-பூண்டு விழுது
  • பட்டை
  • சோம்பு
  • லவங்கம்
  • ஏலக்காய்
  • பிரியாணி இலை
  • பிரியாணி மசாலா பொடி
  • கறி மசாலா தூள்
  • தயிர்
  • கொத்தமல்லி இலை
  • புதினா
  • உப்பு
  • எண்ணெய்
  • நெய்

செய்முறை

குக்கரில், 20 மில்லி எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஒரு ஸ்பூன் சோம்பு, பட்டை, லவங்கம், பிரியாணி இலை, ஒரு ஏலக்காய், ஒரு பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், இரண்டு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின், மூன்று தக்காளி, ஒரு கைப்பிடி புதினா சேர்த்து வதக்கவும்.

இதனுடன், 100 கிராம் பச்சை பட்டாணி, இரண்டு ஸ்பூன் தயிர், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், இரண்டு ஸ்பூன் பிரியாணி மசாலா பொடி சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.

பின்னர், இரண்டு டம்ளர் அரிசி (1/2 மணி நேரம் ஊற வைத்து), நான்கு டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு இரண்டு விசில் விடவும்.

இறுதியாக, தேவையான அளவு நெய் சேர்த்து கலந்து விடவும்.

Previous Post Next Post