தேவையான பொருட்கள்
- சேனைக்கிழங்கு
- கடலை மாவு
- அரிசி மாவு
- மிளகாய் தூள்
- பச்சை மிளகாய்
- சமையல் சோடா
- பெரிய வெங்காயம்
- சோம்பு
- மஞ்சள் தூள்
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
200 கிராம் சேனைக்கிழங்கு தோல் சீவி பொடியாக நறுக்கி வேக வைத்து தண்ணீரை வடித்து விட்டு மசித்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, இரண்டு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
பின், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், தயார் செய்து வைத்துள்ள சேனைக்கிழங்கு, தேவையான அளவு உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து கலந்து விடவும்.
ஆறிய பின், சிறிய உருண்டைகளாக பிடித்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில், ஒரு கப் கடலை மாவு, 1/4 கப் அரிசி மாவு, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், 1/4 ஸ்பூன் சமையல் சோடா, தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
பின்னர், தயார் செய்து வைத்துள்ள சேனைக்கிழங்கு உருண்டைகளை மாவில் போட்டு பின் எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
