தேவையான பொருட்கள்
- சேனைக்கிழங்கு
- கடலை மாவு
- அரிசி மாவு
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- மிளகாய் தூள்
- சோம்பு
- பெருங்காயத்தூள்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
தோல் சீவி பொடியாக நறுக்கிய ஒரு கப் சேனைக்கிழங்கு வேக வைத்து தண்ணீரை வடித்து விட்டு மசித்து எடுத்துக் கொள்ளவும்.
இதனுடன், ஒரு கப் கடலை மாவு, 1/4 கப் அரிசி மாவு, ஒரு கப் பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் சோம்பு, 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள், சிறிதளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
பின், எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
