பப்பாளி காய் பொரியல்

தேவையான பொருட்கள்

  • பப்பாளி காய்
  • சின்ன வெங்காயம்
  • கடலைப்பருப்பு
  • மஞ்சள் தூள்
  • மிளகாய் தூள்
  • காய்ந்த மிளகாய்
  • எண்ணெய்
  • உப்பு
  • கறிவேப்பிலை

செய்முறை

கடாயில் ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு கைப்பிடி கடலைப்பருப்பு, இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, பத்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

ஒரு கப் பொடியாக நறுக்கிய பப்பாளி காய், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

ஒரு டம்ளர் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் வேக வைக்கவும். தேவைப்பட்டால் 1/4 கப் துருவிய தேங்காய் சேர்க்கவும்.

Previous Post Next Post