கோதுமை மாவு குலாப் ஜாமுன்

தேவையான பொருட்கள்

  • கோதுமை மாவு
  • பால் பவுடர்
  • சர்க்கரை
  • பால்
  • பாதாம்
  • எண்ணெய்

செய்முறை

1/2 கப் கோதுமை மாவு, 1/2 கப் பால் பவுடர் மற்றும் தேவையான அளவு பால் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

பின், ஒரு பாத்திரத்தில், இரண்டு கப் சர்க்கரை, ஒரு கப் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சிக் கொள்ளவும்.

கடாயில், 250 மில்லி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன் அடுப்பை மெதுவாக வைத்து, பிசைந்து வைத்துள்ள மாவை சிறிய உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் போட்டு பொரித்து தயார் செய்து வைத்துள்ள பாகில் போட்டு 30 நிமிடங்கள் விடவும்.

இறுதியாக, அதன் மேல் பாதாம் பருப்பை துருவி சேர்க்கவும்.

Previous Post Next Post