தேவையான பொருட்கள்
- கொத்தமல்லி இலை
- சோள மாவு
- சீரகம்
- மிளகு
- தனியா தூள்
- சிக்கன் மசாலா பொடி
- மஞ்சள் தூள்
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
கடாயில், இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், 1/4 ஸ்பூன் சீரகம், இரண்டு டம்ளர் தண்ணீர், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு கப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா பொடி, தேவையான அளவு உப்பு, 1/2 ஸ்பூன் தனியா தூள் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.
பின், இரண்டு ஸ்பூன் மிளகு மற்றும் ஒரு ஸ்பூன் சீரகம் தட்டி சேர்க்கவும். இதனுடன், ஒரு ஸ்பூன் சோள மாவை 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு சேர்த்து கொதிக்கத் தொடங்கியவுடன், அடுப்பை நிறுத்திவிட்டு பத்து நிமிடம் மூடி வைக்கவும்.
