புதினா சூப்


தேவையான பொருட்கள்

  • புதினா
  • கொத்தமல்லி இலை
  • மிளகுத்தூள்
  • சீரகத்தூள்
  • மஞ்சள் தூள்
  • சிக்கன் மசாலா பொடி
  • உப்பு

செய்முறை

பாத்திரத்தில், இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து தண்ணீர் சூடானவுடன், 1/2 கப் புதினா, 1/4 கப் கொத்தமல்லி இலை, ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா பொடி, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

இறுதியாக, 1/2 ஸ்பூன் சீரகத்தூள், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து கலந்து விடவும்.

Previous Post Next Post