கருவாடு வறுவல்

தேவையான பொருட்கள்

  • சின்ன கருவாடு
  • சின்ன வெங்காயம்
  • மிளகுத்தூள்
  • மிளகாய் தூள்
  • மஞ்சள் தூள்
  • பச்சை மிளகாய்
  • தக்காளி
  • உப்பு
  • கடுகு
  • நல்லெண்ணெய்
  • கறிவேப்பிலை

செய்முறை

ஒரு கப் கருவாடை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.

கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, 1/4 கப் சின்ன வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பின், ஒரு சிறிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

ஊற வைத்துள்ள கருவாடு, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து பத்து நிமிடங்கள் நன்கு கிளறவும்.

Previous Post Next Post