பப்பாளிக்காய் கூட்டு

தேவையான பொருட்கள்

  • பப்பாளிக்காய்
  • தேங்காய்
  • சின்ன வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • சீரகம்
  • மஞ்சள் தூள்
  • பாசிப்பருப்பு
  • கடலைப்பருப்பு
  • உளுந்து பருப்பு
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • உப்பு
  • பெருங்காயத்தூள்
  • எண்ணெய்

செய்முறை

ஒரு கப் துருவிய தேங்காய், இரண்டு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து அரைக்கவும்.

பின், ஒரு கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, பத்து சின்ன வெங்காயம், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பின், ஒரு சிறிய தக்காளி ‌ சேர்த்து வதக்கவும்.

பொடியாக நறுக்கிய ஒரு கப் பப்பாளிக்காய், 1/4 கப் வேக வைத்த பாசிப்பருப்பு, அரைத்து வைத்துள்ள தேங்காய், தேவையான அளவு உப்பு, தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.

கொதிக்க தொடங்கியவுடன், அடுப்பை மெதுவாக வைத்து சிறிதளவு கொத்தமல்லி இலை மற்றும் 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து இறக்கவும்.

Previous Post Next Post