தேவையான பொருட்கள்
- கருப்பு சுண்டல்
- தட்டைப்பயிறு
- கொள்ளு பருப்பு
- சின்ன வெங்காயம்
- தக்காளி
- காய்ந்த மிளகாய்
- மிளகாய் தூள்
- சாம்பார் தூள்
- பெருங்காயத்தூள்
- மஞ்சள் தூள்
- நல்லெண்ணெய்
- கடுகு
- வெந்தயம்
- கடலைப்பருப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- உப்பு
செய்முறை
முதலில், தட்டைப்பயிறு, கருப்பு சுண்டல், கொள்ளு பருப்பு மூன்றும் சேர்த்து ஒரு கப் எடுத்து ஆறு மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து விட்டு ஒரு நாள் முளைக் கட்டி வைக்கவும்.
பின், குக்கரில் முளைகட்டிய பயிறு, இரண்டு கப் தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து இரண்டு விசில் விடவும்.
கடாயில், 50 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் வெந்தயம், இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, நான்கு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, 1/4 கப் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கிய பின், இரண்டு தக்காளி, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
பின், இதனுடன் ஒரு கப் புளிக்கரைசல், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் சாம்பார் தூள், வேக வைத்துள்ள பயிறை தண்ணீரை வடிக்காமல் சேர்க்கவும். மேலும், தேவையான அளவு உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
இறுதியாக, 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.
