தேவையான பொருட்கள்
- வெல்லம்
- தேங்காய்
- ஏலக்காய் பொடி
- நெய்
செய்முறை
கடாயில், இரண்டு ஸ்பூன் நெய், ஒரு கப் துருவிய தேங்காய் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின், அதே கடாயில் ஒரு கப் பொடியாக்கிய வெல்லம், 1/2 கப் தண்ணீர் சேர்த்து இறுக்கமான பதத்திற்கு பாகு காய்ச்சவும்.
பின்னர், வறுத்து வைத்துள்ள தேங்காய், 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலந்து விட்டு சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.
