ஆம்லெட் சூப்

தேவையான பொருட்கள்

  • முட்டை
  • சோள மாவு
  • மிளகுத்தூள்
  • மிளகாய் தூள்
  • சீரகத்தூள்
  • சீரகம்
  • சிக்கன் மசாலா பொடி
  • கறி மசாலா தூள்
  • கொத்தமல்லி இலை
  • உப்பு
  • எண்ணெய்

செய்முறை

பாத்திரத்தில், இரண்டு முட்டை, ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பின், தயார் செய்து வைத்துள்ள முட்டையை தோசை கல்லில் ஊற்றி வேக வைத்து சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், 1/2 ஸ்பூன் சீரகம், தயார் செய்து வைத்துள்ள முட்டை, 1/4 ஸ்பூன் கறி மசாலா தூள், 1/2 ஸ்பூன் சிக்கன் மசாலா பொடி, 1/2 ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

வதங்கிய பின், ஒரு கப் தண்ணீர் சேர்த்து தண்ணீர் கொதிக்க தொடங்கியவுடன், ஒரு ஸ்பூன் சோள மாவை தண்ணீரில் கரைத்து சேர்க்கவும், தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைக்கவும்.

இறுதியாக, ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.

Previous Post Next Post