தேவையான பொருட்கள்
- புளிச்சக்கீரை
- சின்ன வெங்காயம்
- காய்ந்த மிளகாய்
- சீரகம்
- தக்காளி
- மஞ்சள் தூள்
- உப்பு
- நல்லெண்ணெய்
- கறிவேப்பிலை
செய்முறை
பாத்திரத்தில், ஒரு கப் தண்ணீர் சேர்த்து தண்ணீர் கொதிக்க தொடங்கியவுடன் இரண்டு கப் சுத்தம் செய்த கீரை சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைக்கவும்.
கடாயில், 50 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சீரகம், 1/4 கப் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் நான்கு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின், ஒரு தக்காளி, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், வேக வைத்துள்ள கீரை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு கொதிக்க வைக்கவும்.
பின், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு மசித்து கொள்ளவும்.
