மட்டன் உருண்டை சூப்

தேவையான பொருட்கள்

  • மட்டன்
  • கறி மசாலா தூள்
  • மட்டன் மசாலா பொடி
  • மிளகுத்தூள்
  • சீரகப்பொடி
  • தனியா தூள்
  • மஞ்சள் தூள்
  • சோம்பு
  • உப்பு
  • சோள மாவு
  • எண்ணெய்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

எலும்பை நீக்கிய 100 கிராம் மட்டனை பொடியாக வெட்டிக் கொள்ளவும். இதனுடன், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், ஒரு ஸ்பூன் மட்டன் மசாலா பொடி, 1/2 ஸ்பூன் சீரகத்தூள், 1/2 ஸ்பூன் தனியா தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், நான்கு ஸ்பூன் சோள மாவு, பொடியாக நறுக்கிய சிறிதளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

பின், சிறிய உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், 1/2 ஸ்பூன் சோம்பு, சிறிதளவு கறிவேப்பிலை, தயார் செய்து வைத்துள்ள மட்டன் உருண்டை சேர்த்து கலந்து விடவும். அதனுடன், ஒரு கப் தண்ணீர், இரண்டு ஸ்பூன் தண்ணீரில் கரைத்த சோள மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைக்கவும்.

இறுதியாக, ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.

Previous Post Next Post