சுண்டல் சூப்

தேவையான பொருட்கள்

  • சுண்டல்
  • கேரட்
  • பீன்ஸ்
  • மிளகாய் தூள்
  • மிளகுத்தூள்
  • சோள மாவு
  • உப்பு
  • கொத்தமல்லி இலை

செய்முறை

1/2 கப் கருப்பு சுண்டல் எடுத்து ஐந்து மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.

குக்கரில், ஊற வைத்துள்ள சுண்டல், இரண்டு கப் தண்ணீர், 1/4 கப் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், தேவையான அளவு உப்பு சேர்த்து நான்கு விசில் விடவும்.

பின், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், இரண்டு ஸ்பூன் தண்ணீரில் கரைத்த சோள மாவு சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.

இறுதியாக, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து கலந்து விடவும்.

Previous Post Next Post