பருப்பு போண்டா

தேவையான பொருட்கள்

  • கடலைப்பருப்பு
  • பெரிய வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • கடலை மாவு
  • இஞ்சி
  • பூண்டு
  • சோம்பு
  • பெருங்காயத்தூள்
  • உப்பு
  • எண்ணெய் 

செய்முறை

ஒரு கப் கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து 1/4 கப் கடலைப்பருப்பை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பின், ஊற வைத்துள்ள கடலை பருப்புடன் சிறிதளவு இஞ்சி, இரண்டு பல் பூண்டு, 1/2 ஸ்பூன் சோம்பு, தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும்.

அரைத்து வைத்துள்ள பருப்புடன், 1/4 கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், மூன்று பச்சை மிளகாய், 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள், சிறிதளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, எடுத்து வைத்துள்ள கடலைப்பருப்பு, நான்கு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

பின், சிறிய உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.


Previous Post Next Post