தேவையான பொருட்கள்
- மரவள்ளிக்கிழங்கு
- சர்க்கரை
- மைதா
- ரவை
- தேங்காய்
- பால்
- ஏலக்காய் பொடி
- எண்ணெய்
- சமையல் சோடா
செய்முறை
வேக வைத்து மசித்த மரவள்ளிக்கிழங்கு ஒரு கப், 1/2 கப் மைதா, 1/4 கப் ரவை, 1/2 கப் சர்க்கரை, 1/2 கப் துருவிய தேங்காய், 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி, 1/4 ஸ்பூன் சமையல் சோடா சேர்த்து நன்கு கலந்து விட்டு தேவையான அளவு பால் சேர்த்து இளக்கமாக பிசைந்து ஒரு மணி நேரம் வைக்கவும்.
பின், சிறிது சிறிதாக தட்டி எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
