தேவையான பொருட்கள்
- மீன்
- பெரிய வெங்காயம்
- தக்காளி
- பச்சை மிளகாய்
- மிளகாய் தூள்
- மிளகுத்தூள்
- சோம்பு
- மஞ்சள் தூள்
- உப்பு
- நல்லெண்ணெய்
- கறிவேப்பிலை
செய்முறை
முதலில், முட்களை நீக்கி பொடியாக நறுக்கிய ஒரு கப் மீன் எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், 25 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின், ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், தயார் செய்து வைத்துள்ள மீன், தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து கலந்து விட்டு பத்து நிமிடம் வதக்கவும்.
இறுதியாக, ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து கலந்து விடவும்.
