தேவையான பொருட்கள்
- மரவள்ளிக் கிழங்கு
- அரிசி மாவு
- எள்
- எண்ணெய்
- சர்க்கரை
செய்முறை
பாத்திரத்தில், ஒரு கப் சர்க்கரை, 1/2 கப் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.
பின், ஒரு கப் மரவள்ளிக் கிழங்கை வேக வைத்து மசித்து எடுத்துக் கொள்ள.
இதனுடன், 1/2 கப் அரிசி மாவு, ஒரு ஸ்பூன் எள், 25 மில்லி எண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து எண்ணெயில் போட்டு வேக வைத்து, தயார் செய்து வைத்துள்ள பாகில் போட்டு ஐந்து நிமிடம் விட்டு எடுக்கவும்.
