தேவையான பொருட்கள்
- கொக்கோ பவுடர்
- மைதா
- டார்க் சாக்லேட்
- பால்
- சர்க்கரை
- சமையல் சோடா
- எண்ணெய்
செய்முறை
ஒரு கப் பால் மற்றும் 1/4 கப் சர்க்கரை சேர்த்து பாலை காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில், ஒரு கப் மைதா, 1/4 கப் கொக்கோ பவுடர், 1/4 ஸ்பூன் சமையல் சோடா சேர்த்து கலந்து விட்டு காய்ச்சி வைத்த பாலை சேர்த்து நன்கு பிசைந்து ஒரு மணி நேரம் வைக்கவும்.
பின், சிறிய உருண்டைகளாக பிடித்து தேய்த்து அதன் மேல் இரண்டு ஸ்பூன் துருவிய டார்க் சாக்லேட் வைத்து நன்கு மடித்து தேய்த்து எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
