முருங்கைக்கீரை ராகி வடை

தேவையான பொருட்கள்

  • ராகி மாவு
  • முருங்கைக்கீரை
  • பெரிய வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • சோம்பு
  • பொட்டுக்கடலை
  • பெருங்காயத்தூள்
  • உப்பு
  • எண்ணெய்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

ஒரு கப் ராகி மாவு, ஒரு கப் முருங்கைக்கீரை, 1/2 கப் பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ஐந்து, 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு கைப்பிடி பொட்டுக்கடலை, சிறிதளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இளக்கமாக பிசைந்து கொள்ளவும்.

பின், சிறிய உருண்டைகளாக பிடித்து தட்டி எண்ணெயில் போட்டு வேக வைக்கவும்.



Previous Post Next Post