தேவையான பொருட்கள்
- கேழ்வரகு
- உப்பு
- இஞ்சி
- சீரகம்
செய்முறை
ஒரு கப் கேழ்வரகை ஒரு மணி நேரம் ஊற வைத்து 1/2 கப் தண்ணீர் சேர்த்து அரைத்து கேழ்வரகு பாலை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில், ஒரு கப் தண்ணீர் சேர்த்து தண்ணீர் கொதிக்க தொடங்கியவுடன், தயார் செய்து வைத்துள்ள கேழ்வரகு பால் சேர்த்து கலந்து விடவும். அதனுடன், தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு இஞ்சி தட்டிச் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.
இறுதியாக, ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து கலந்து விடவும்.
