தேவையான பொருட்கள்
- கேழ்வரகு
- நாட்டுச் சர்க்கரை
- ஏலக்காய் பொடி
செய்முறை
ஒரு கப் கேழ்வரகை ஒரு மணி நேரம் ஊற வைத்து 1/2 கப் தண்ணீர் சேர்த்து அரைத்து கேழ்வரகு பாலை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில், ஒரு கப் தண்ணீர் சேர்த்து தண்ணீர் கொதிக்க தொடங்கியவுடன் 1/2 கப் நாட்டுச் சர்க்கரை, தயார் செய்து வைத்துள்ள கேழ்வரகு பால் சேர்த்து கலந்து விடவும். கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை மெதுவாக வைத்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.
இறுதியாக, 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து விடவும்.
