கம்பு பால் அல்வா

தேவையான பொருட்கள்

  • கம்பு
  • சர்க்கரை
  • மைதா
  • நெய்
  • எண்ணெய்
  • ஏலக்காய் பொடி
  • கேசரி பவுடர்
  • முந்திரி

செய்முறை

ஒரு கப் கம்பு மூன்று மணி நேரம் ஊற வைத்து அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து அரைத்து கம்பு பாலை எடுத்துக் கொள்ளவும்.

கடாயில், கம்பு பால், நான்கு ஸ்பூன் மைதா சேர்த்து நன்கு கலந்து விடவும். இதனுடன், தேவையான அளவு சர்க்கரை மற்றும் 1/4 ஸ்பூன் கேசரி பவுடர் சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை மெதுவாக வைத்துக் கொள்ளவும்.

இறுகும் வரை நன்கு கலந்து விடவும். இடையே, நெய் மற்றும் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.

அல்வா பதத்திற்கு வந்தவுடன் 50 கிராம் நெய்யில் வறுத்த முந்திரி, 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு கலந்து விடவும்.

Previous Post Next Post