ராகி சால்ட் பிஸ்கட்


தேவையான பொருட்கள்

  • ராகி மாவு
  • மைதா
  • சர்க்கரை
  • உப்பு
  • வெண்ணெய்

செய்முறை

கடாயில், ஒரு கப் ராகி மாவு, 1/4 கப் மைதா சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பின், ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதனுடன் 1/2 ஸ்பூன் உப்பு, நான்கு ஸ்பூன் சர்க்கரை, 25 கிராம் வெண்ணெய் ‌ சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து இறுக்கமாக பிசைந்து கொள்ளவும்.

பின்னர், சிறிய உருண்டைகளாக பிடித்து தட்டி ஒரு தட்டில் எண்ணெய் தடவி வைத்துக் கொள்ளவும்.

கடாயில், உப்பு அல்லது மணல் சேர்த்து அதன் மேல் ஸ்டாண்ட் வைத்து அதன் மேல் வைத்து வேக வைக்கவும்.

Previous Post Next Post