தேவையான பொருட்கள்
- ராகி மாவு
- மைதா
- நாட்டுச் சர்க்கரை
- நெய்
செய்முறை
கடாயில், ஒரு கப் ராகி மாவு, 1/4 கப் மைதா சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின், ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதனுடன் 1/2 கப் நாட்டுச் சர்க்கரை, நான்கு ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து விட்டு தண்ணீர் சேர்த்து இறுக்கமாக பிசைந்து கொள்ளவும்.
பின்னர், சிறிய உருண்டைகளாக பிடித்து தட்டி ஒரு தட்டில் எண்ணெய் தடவி வைத்துக் கொள்ளவும்.
கடாயில், உப்பு அல்லது மணல் சேர்த்து அதன் மேல் ஸ்டாண்ட் வைத்து அதன் மேல் வைத்து வேக வைக்கவும்.
