உருளைக்கிழங்கு பட்டாணி கிரேவி

தேவையான பொருட்கள்

  • உருளைக்கிழங்கு
  • பச்சை பட்டாணி
  • சின்ன வெங்காயம்
  • பெரிய வெங்காயம்
  • தனியா தூள்
  • சீரகம்
  • சோம்பு
  • தக்காளி
  • பச்சை மிளகாய்
  • சிக்கன் மசாலா தூள்
  • கறி மசாலா தூள்
  • மிளகாய் தூள்
  • மஞ்சள் தூள்
  • தேங்காய்
  • கடுகு
  • நல்லெண்ணெய்
  • உப்பு
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

முதலில், 1/4 கப் பச்சை பட்டாணியை 5 மணி நேரம் ஊற வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, 1/4 கப் சின்ன வெங்காயம், இரண்டு தக்காளி, ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து வதக்கவும்.

பின், இரண்டு ஸ்பூன் தனியா தூள், 1/4 கப் துருவிய தேங்காய் சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.

ஆறிய பின், இதனை அரைத்துக் கொள்ளவும்.

மற்றொரு கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்று, நான்கு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வதங்கிய பின், 200 கிராம் தோல் நீக்கி பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

மேலும், வேக வைத்துள்ள பச்சை பட்டாணி, ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், அரைத்து வைத்துள்ள மசாலா, ஒரு டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை மெதுவாக வைத்து 15 நிமிடம் வேக வைக்கவும்.

இறுதியாக, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.

Previous Post Next Post