சேமியா ஜவ்வரிசி பாயாசம்

தேவையான பொருட்கள்

  • சேமியா
  • ஜவ்வரிசி
  • சர்க்கரை
  • தேங்காய்
  • ஏலக்காய்
  • முந்திரி
  • திராட்சை
  • நெய்

செய்முறை

பாத்திரத்தில், நான்கு கப் தண்ணீர் சேர்த்து தண்ணீர் கொதிக்க தொடங்கியவுடன், 1/2 கப் ஜவ்வரிசி, 1/2 கப் சேமியா சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைக்கவும்.

பின், தேவையான அளவு சர்க்கரை சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து நன்கு வேக வைக்கவும்.

இதனுடன், ஒரு கப் துருவிய தேங்காய், நெய்யில் வறுத்த 50 கிராம் முந்திரி, திராட்சை சேர்க்கவும். இறுதியாக, தட்டிய இரண்டு ஏலக்காய் சேர்த்து கலந்து விடவும்.

Previous Post Next Post