சப்பாத்தி பனீர் ப்ரை

தேவையான பொருட்கள்

  • பனீர்
  • சப்பாத்தி
  • பெரிய வெங்காயம்
  • தக்காளி
  • பச்சை மிளகாய்
  • இஞ்சி-பூண்டு விழுது
  • மிளகாய் தூள்
  • மிளகுத்தூள்
  • கறி மசாலா தூள்
  • மஞ்சள் தூள்
  • சோம்பு
  • பட்டை
  • சோயா சாஸ்
  • ரெட் சில்லி சாஸ்
  • உப்பு
  • எண்ணெய்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

கடாயில், 50 மில்லி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு பட்டை, நீளமாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், மூன்று பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின், ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.

பின்னர், 1/2 கப் பொடியாக நறுக்கிய பனீர் சேர்த்து‌ அடுப்பை மெதுவாக வைத்து ஐந்து நிமிடம் நன்கு வதக்கவும். இதனுடன், பொடியாக நறுக்கிய இரண்டு சப்பாத்தி, இரண்டு ஸ்பூன் சோயா சாஸ், இரண்டு ஸ்பூன் ரெட் சில்லி சாஸ், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்.

இறுதியாக, கொத்தமல்லி இலை சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து கலந்து விடவும்.

Previous Post Next Post