வெண்டைக்காய் சாம்பார்

தேவையான பொருட்கள்

  • துவரம் பருப்பு
  • வெண்டைக்காய்
  • தக்காளி
  • புளி
  • சின்ன வெங்காயம்
  • காய்ந்த மிளகாய்
  • சாம்பார் பொடி
  • மிளகாய் தூள்
  • பெருங்காயத்தூள்
  • மஞ்சள் தூள்
  • கடலைப்பருப்பு
  • உளுந்து பருப்பு
  • வெந்தயம்
  • உப்பு
  • நல்லெண்ணெய்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

பாத்திரத்தில், 100 கிராம் துவரம் பருப்பு, இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, 1/2 ஸ்பூன் வெந்தயம், ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு, நான்கு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, பத்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பின், இரண்டு தக்காளி சேர்த்து வதக்கவும். மேலும், 100 கிராம் பொடியாக நறுக்கிய வெண்டைக்காய், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

பின்னர், 1/4 கப் புளிக்கரைசல், இரண்டு ஸ்பூன் சாம்பார் பொடி, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.

இதனுடன், வேக வைத்துள்ள துவரம் பருப்பு, தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.

இறுதியாக, 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள், சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.

Previous Post Next Post