தேவையான பொருட்கள்
- தக்காளி
- பூண்டு
- புளி
- மிளகாய் தூள்
- வெந்தய பொடி
- மஞ்சள் தூள்
- பெருங்காயத்தூள்
- உப்பு
- கடுகு
- கறிவேப்பிலை
- நல்லெண்ணெய்
செய்முறை
300 கிராம் தக்காளியை அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், 25 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, 50 கிராம் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்னர், அரைத்து வைத்துள்ள தக்காளி, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, 1/4 டம்ளர் புளி கரைசல் சேர்த்து வதக்கவும்.
பின், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் வெந்தய பொடி, 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து தண்ணீர் சுண்டி வரும் வரை வதக்கவும்.
