வெஜ் கோலா உருண்டை

தேவையான பொருட்கள்

  • மீல் மேக்கர்
  • பொட்டுக்கடலை
  • சோம்பு
  • பட்டை
  • கல் பாசி
  • காய்ந்த மிளகாய்
  • கறி மசாலா தூள்
  • சிக்கன் மசாலா தூள்
  • மட்டன் மசாலா தூள்
  • பெரிய வெங்காயம்
  • இஞ்சி
  • பூண்டு
  • உப்பு
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • எண்ணெய்

செய்முறை

100 கிராம் மீல் மேக்கரை ஒரு மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை பிழிந்து எடுத்து அரைக்கவும்.

பின், 25 கிராம் பொட்டுக்கடலை, ஒரு ஸ்பூன் சோம்பு, நான்கு பல் பூண்டு, சிறிதளவு இஞ்சி, ஒரு பட்டை, சிறிதளவு கல் பாசி, நான்கு காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

இதனை அரைத்து வைத்துள்ள மீல் மேக்கருடன் சேர்த்து, பொடியாக நறுக்கிய 1/4 கப் பெரிய வெங்காயம், ஒரு ஸ்பூன் மட்டன் மசாலா தூள், ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா தூள், ஒரு ஸ்பூன் கறி மசாலா தூள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு சிறிய உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

Previous Post Next Post