சிக்கன் கோலா உருண்டை


தேவையான பொருட்கள்

  • சிக்கன்
  • சின்ன வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • சோம்பு
  • பட்டை
  • தனியா தூள்
  • கறி மசாலா தூள்
  • மட்டன் மசாலா தூள்
  • சிக்கன் மசாலா தூள்
  • பூண்டு
  • கடலை மாவு
  • அரிசி மாவு
  • மஞ்சள் தூள்
  • இஞ்சி
  • உப்பு
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • எண்ணெய்

செய்முறை

கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு பட்டை சேர்த்து பொரிந்தவுடன், 1/4 கப் சின்ன வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், நான்கு பல் பூண்டு, சிறிதளவு இஞ்சி சேர்த்து வதக்கவும்.

பின், மற்றொரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய், ஒரு கப் எலும்பில்லாமல் பொடியாக்கிய சிக்கன், ஒரு ஸ்பூன் உப்பு, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

வதங்கிய பின், 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து, தண்ணீர் சுண்டி வரும் வரை வதக்கவும்.

ஆறிய பின், வதக்கி வைத்துள்ள சிக்கன், வதக்கி வைத்துள்ள மசாலாவை அரைக்கவும்.

அதனுடன், இரண்டு ஸ்பூன் கடலை மாவு, இரண்டு ஸ்பூன் அரிசி மாவு, ஒரு ஸ்பூன் தனியா தூள், ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா தூள், ஒரு ஸ்பூன் மட்டன் மசாலா தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு சிறிய உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

Previous Post Next Post