பருப்பு-நெய் சாதம்

தேவையான பொருட்கள்

  • துவரம் பருப்பு
  • நெய்
  • அரிசி
  • உப்பு
  • சீரகம்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

குக்கரில், 25 மில்லி நெய் சேர்த்து காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சீரகம், சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு கப் துவரம் பருப்பு சேர்த்து நன்கு வறுக்கவும்.

பின், ஒரு கப் அரிசியை 30 நிமிடம் ஊற வைத்து இதனுடன் சேர்க்கவும். மேலும், இரண்டு கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு விசில் விடவும்.

இறுதியாக, நான்கு ஸ்பூன் நெய் மற்றும் சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.

Previous Post Next Post