தேவையான பொருட்கள்
- அரிசி
- கேரட்
- பீன்ஸ்
- பச்சை பட்டாணி
- காய்ந்த மிளகாய்
- நெய்
- சீரகம்
- மஞ்சள் தூள்
- உப்பு
- நல்லெண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
குக்கரில், 25 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சீரகம், ஐந்து காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, கேரட், பீன்ஸ், மற்றும் பட்டாணி மூன்றும் சேர்த்து ஒரு கப் சேர்த்து வதக்கவும்.
பின், ஒரு கப் அரிசியை 1/2 மணி நேரம் ஊற வைத்து சேர்க்கவும். மேலும், இரண்டு கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு இரண்டு அல்லது மூன்று விசில் விடவும்.
இறுதியாக, 25 மில்லி நெய் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து கலந்து விடவும்.
