மசாலா பஜ்ஜி


தேவையான பொருட்கள் 

  • வாழைக்காய் 
  • கடலை மாவு 
  • அரிசி மாவு 
  • மைதா 
  • உருளைக்கிழங்கு 
  • தக்காளி 
  • சோம்பு 
  • பச்சை மிளகாய் 
  • பூண்டு 
  • இஞ்சி 
  • பெருங்காயத்தூள்
  • உப்பு 
  • கறிவேப்பிலை
  • எண்ணெய் 


செய்முறை 

ஒரு சிறிய உருளைக்கிழங்கை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும், அதனுடன், ஒரு தக்காளி, இரண்டு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் சோம்பு, இரண்டு பல் பூண்டு, சிறிதளவு இஞ்சி, சிறிதளவு கறிவேப்பிலை, 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். 

ஒரு கப் கடலை மாவு, 1/4 கப்-க்கும் குறைவாக அரிசி மாவு, இரண்டு ஸ்பூன் மைதா, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள், அரைத்து வைத்துள்ள கலவை சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். 

பின், வாழைக்காயை தோல் நீக்கிவிட்டு, தேவைக்கேற்ப சீவி, தயார் செய்து வைத்துள்ள மாவில் போட்டு எண்ணெயில் போட்டு வேக வைக்கவும்.

Previous Post Next Post