தேவையான பொருட்கள்
- வாழைக்காய்
- கடலை மாவு
- அரிசி மாவு
- மைதா
- புதினா
- இஞ்சி
- பூண்டு
- சோம்பு
- பெருங்காயத்தூள்
- மிளகாய் தூள்
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
ஒரு கப் புதினா, ஒரு ஸ்பூன் சோம்பு, நான்கு பல் பூண்டு, சிறிதளவு இஞ்சி, 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கப் கடலை மாவு, 1/4 கப்-க்கும் குறைவாக அரிசி மாவு, இரண்டு ஸ்பூன் மைதா, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள், அரைத்து வைத்துள்ள புதினா கலவை சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
பின், வாழைக்காயை தோல் நீக்கிவிட்டு, தேவைக்கேற்ப சீவி, தயார் செய்து வைத்துள்ள மாவில் போட்டு எண்ணெயில் போட்டு வேக வைக்கவும்.
