அரிசி உப்புமா


தேவையான பொருட்கள் 

  • அரிசி 
  • கடலைப்பருப்பு
  • பெரிய வெங்காயம் 
  • கேரட் 
  • பீன்ஸ்
  • உளுந்து பருப்பு 
  • காய்ந்த மிளகாய் 
  • சீரகம் 
  • மஞ்சள் தூள் 
  • நல்லெண்ணெய் 
  • உப்பு 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 

செய்முறை 

கடாயில், ஒரு கப் அரிசி சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். 

ஆறிய பின், ஒன்று இரண்டாக அரைத்துக் கொள்ளவும். 

பின், கடாயில், 50 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சீரகம், இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, ஐந்து காய்ந்த மிளகாய், 1/2 கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

பின், 1/2 கப் பொடியாக நறுக்கிய கேரட்-பீன்ஸ் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். 

இதனுடன் மூன்று கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் அரைத்து வைத்துள்ள அரிசியை சேர்த்து கலந்து விடவும். நன்கு கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை மெதுவாக வைத்து பத்து நிமிடம் வேக வைக்கவும். 

இறுதியாக, கொத்தமல்லி இலை சேர்த்து அடுப்பை நிறுத்தி பத்து நிமிடம் மூடி வைக்கவும். தேவைப்பட்டால் நெய் சேர்த்துக் கொள்ளலாம்.
Previous Post Next Post