இட்லி உப்புமா


தேவையான பொருட்கள் 

  • இட்லி 
  • பெரிய வெங்காயம் 
  • கடலைப்பருப்பு 
  • பச்சை மிளகாய் 
  • மஞ்சள் தூள்
  • கடுகு 
  • உளுந்து பருப்பு 
  • எண்ணெய் 
  • உப்பு 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 


செய்முறை 

கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், பொடியாக்கிய 5 இட்லி, தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கலந்து விடவும். இறுதியாக, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

Previous Post Next Post