பச்சைப்பயிறு வெங்காய பணியாரம்


தேவையான பொருட்கள் 

  • பச்சைப்பயிறு 
  • இட்லி அரிசி 
  • உளுந்து பருப்பு 
  • வெந்தயம் 
  • அவல் 
  • பெரிய வெங்காயம் 
  • சோம்பு 
  • கடலைப்பருப்பு 
  • காய்ந்த மிளகாய் 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை
  • உப்பு
  • சமையல் சோடா 
  • நல்லெண்ணெய்


செய்முறை 

ஒரு கப் பச்சைப்பயிறு, 1/4 கப் இட்லி அரிசி, 1/4 கப்-ற்கும் குறைவாக உளுந்து பருப்பு, இரண்டு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து 6 மணி நேரம் ஊற வைக்கவும். 

பின், 1/4 கப் அவலை நனைத்து இதனுடன் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

கடாயில், நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய நான்கு காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி தயார் செய்து வைத்துள்ள மாவுடன் சேர்க்கவும். 

மேலும் இதனுடன், தேவையான அளவு உப்பு சேர்த்து நான்கு அல்லது ஐந்து மணி நேரம் வைத்து, சிறிதளவு சமையல் சோடா சேர்த்து கலந்து விட்டு, பணியாரக்கல்லில் ஊற்றி தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.

Previous Post Next Post