தேவையான பொருட்கள்
- பச்சைப்பயிறு
- இட்லி அரிசி
- உளுந்து பருப்பு
- வெந்தயம்
- அவல்
- உப்பு
- சமையல் சோடா
- நல்லெண்ணெய்
செய்முறை
ஒரு கப் பச்சைப்பயிறு, 1/4 கப் இட்லி அரிசி, 1/4 கப்-ற்கும் குறைவாக உளுந்து பருப்பு, இரண்டு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின், 1/4 கப் அவலை நனைத்து இதனுடன் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
இதனுடன், தேவையான அளவு உப்பு சேர்த்து நான்கு அல்லது ஐந்து மணி நேரம் வைத்து, சிறிதளவு சமையல் சோடா சேர்த்து கலந்து விட்டு, பணியாரக்கல்லில் ஊற்றி தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.
