தேவையான பொருட்கள்
- ரவை
- மைதா
- தயிர்
- கேரட்
- பீன்ஸ்
- பச்சை பட்டாணி
- பாசிப்பருப்பு
- சீரகம்
- மிளகாய் தூள்
- பெரிய வெங்காயம்
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சீரகம், இரண்டு ஸ்பூன் பாசிப்பருப்பு, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின், கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி மூன்றும் சேர்த்து ஒரு கப் அளவு, இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள், சேர்த்து எண்ணெயில் வதக்கவும்.
100 கிராம் வறுத்த ரவை, 50 கிராம் மைதா, 100 மில்லி தயிர், வதக்கி வைத்துள்ள கேரட்- பீன்ஸ்-பச்சை பட்டாணி, தேவையான அளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து தோசை மாவு பதத்திலிருந்து கொஞ்சம் இறுக்கமாக கரைத்து ஒரு மணி நேரம் வைக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு சமையல் சோடா சேர்த்துக் கொள்ளலாம்.
பின், பணியார கல்லில் ஊற்றி தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.
