தேவையான பொருட்கள்
- வாழைக்காய்
- கடலை மாவு
- அரிசி மாவு
- மைதா
- கீரை
- சீரகம்
- பூண்டு
- பெருங்காயத்தூள்
- மிளகாய் தூள்
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
ஒரு கப் கீரை, ஒரு ஸ்பூன் சீரகம், இரண்டு பல் பூண்டு, 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கப் கடலை மாவு, 1/4 கப்-க்கும் குறைவாக அரிசி மாவு, இரண்டு ஸ்பூன் மைதா, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள், அரைத்து வைத்துள்ள கீரை கலவை சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
பின், வாழைக்காயை தோல் நீக்கிவிட்டு, தேவைக்கேற்ப சீவி, தயார் செய்து வைத்துள்ள மாவில் போட்டு எண்ணெயில் போட்டு வேக வைக்கவும்.
