அவல் பணியாரம்


தேவையான பொருட்கள் 

  • தோசை மாவு 
  • அவல் 
  • கேரட் 
  • பீன்ஸ்  
  • கடலைப்பருப்பு 
  • கடுகு 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை
  • உப்பு
  • பெரிய வெங்காயம்
  • எண்ணெய் 


செய்முறை 

கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஒரு ஸ்பூன் கடுகு, இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்று சேர்த்து வதக்கவும். ஒரு நிமிடம் வதங்கிய பின், 1/2 கப் பொடியாக நறுக்கிய கேரட்-பீன்ஸ் சேர்த்து வதக்கவும். பின், இதனை ஒரு கப் தோசை மாவுடன் சேர்க்கவும்.

மேலும், தோசை மாவுடன், 1/2 கப் அவல் தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும். 

பின், பணியாரக்கல்லில் ஊற்றி தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.

Previous Post Next Post