அவல் இனிப்பு இட்லி

தேவையான பொருட்கள் 

  • இட்லி அரிசி 
  • பாசிப்பருப்பு 
  • அவல்
  • உளுந்து பருப்பு 
  • வெந்தயம் 
  • நாட்டுச் சர்க்கரை 


செய்முறை 

ஒரு கப் இட்லி அரிசி, 1/4 கப்-க்கும் குறைவாக உளுந்து பருப்பு, இரண்டு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஆறு மணி நேரம் ஊற வைக்கவும். 

ஆறு மணி நேரம் ஊறிய பின், அரைக்கவும். அரிசி அரைந்த பின் இதனுடன், 1/2 மணி நேரம் ஊற வைத்த 1/4 கப் பாசிப்பருப்பு, 1/2 கப் அவல் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 

பின், தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை சேர்த்து ஆறு மணி நேரம் வைக்கவும். 

பின்னர், இட்லி பாத்திரத்தில் ஊற்றி வேக வைக்கவும்.

Previous Post Next Post