தேவையான பொருட்கள்
- அவல்
- சேமியா
- சர்க்கரை
- நெய்
- தேங்காய்
- ஏலக்காய்
- முந்திரி
- உலர் திராட்சை
செய்முறை
கடாயில், ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து அதனுடன் ஒரு கப் சேமியா சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின், பாத்திரத்தில், இரண்டு கப் தண்ணீர் சேர்த்து தண்ணீர் சூடானவுடன், வறுத்து வைத்துள்ள சேமியாவை அதனுடன் சேர்ந்து வேக வைக்கவும்.
சேமியா வெந்தவுடன், 1/4 கப் அவலை தண்ணீரில் நனைத்து தண்ணீரை வடித்து விட்டு அதனுடன் சேர்க்கவும். மேலும், தேவையான அளவு சர்க்கரை சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
பின்னர், 1/4 கப் தேங்காய் பால், 25 கிராம் நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சை, மூன்று ஏலக்காயை தட்டிச் சேர்த்து கலந்து விடவும்.
