தேவையான பொருட்கள்
- ஜவ்வரிசி
- பாசிப்பருப்பு
- வெல்லம்
- நெய்
- தேங்காய்
- ஏலக்காய்
- முந்திரி
- உலர் திராட்சை
செய்முறை
பாசிப்பருப்பு மற்றும் ஜவ்வரிசி இரண்டும் சேர்த்து ஒரு கப் எடுத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
இதனுடன், இரண்டு டம்ளர் தண்ணீர், தேவையான அளவு வெல்லம் சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
மேலும், 1/2 கப் தேங்காய்ப்பால், 25 கிராம் நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சை, மூன்று ஏலக்காயை தட்டி சேர்த்து கலந்து விடவும்.
