முருங்கைக்காய் வறுவல்


தேவையான பொருட்கள் 

  • முருங்கைக்காய் 
  • பெரிய வெங்காயம் 
  • மிளகாய் தூள் 
  • கறி மசாலா தூள்
  • மீன் சில்லி பொடி 
  • மஞ்சள் தூள் 
  • நல்லெண்ணெய் 
  • கடுகு 
  • உப்பு 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 


செய்முறை 

கடாயில், 25 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, இரண்டு பெரிய வெங்காயம், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின், ஒரு கப் பொடியாக நறுக்கிய முருங்கைக்காய், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மீன் சில்லி பொடி, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். 

பின்னர், ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து தண்ணீர் சுண்டி வரும் வரை வேக வைத்து இறுதியாக கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

Previous Post Next Post